அதிகமாக பழத்தை விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்? அதிலும் அந்த பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு, தோலை தூக்கி போடுபவர்களா? அவர்களுக்கு ஒரு முக்கியமான விடயம் உள்ளது.
அப்படி தோலை தூக்கி போடாமல் அதையும் சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.
ஏனெனில் பழத்தை விட பழத்தில் தோல்களிலேயே அதிகமான அளவு ஊட்டச்சத்தானது இருக்கிறது. அந்த தோலானது சுவையான இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதை கண்டிப்பாக சாப்பிடுங்கள்.
ஏனென்றால் அதனை உண்பதால் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதிலும் முக்கியமாக பழத்தை சாப்பிடும் முன்பு நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். அத்தகைய பழங்களில் எவற்றின் தோல்களை முக்கியமாக சாப்பிட வேண்டும்.
மாம்பழம்: பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தின் பழத்தில் மட்டும் ஊட்டச்சத்தானது இல்லை, அதன் தோலிலும் சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதன் தோலை சாப்பிட்டால் நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்கள் குணமாவதுடன், இரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவை குறைத்துவிடும். ஆகவே இந்த மாம்பழத்தை தினமும் ஒரு துண்டுகளை தோலோடு சாப்பிட்டால் நல்லது.
ஆப்பிள்: நிறைய பேர் ஆப்பிளை சாப்பிடும் முன் அதன் தோலை நீக்கி விட்டு, பின் அதனை சாப்பிடுவர். ஆனால் அந்த ஆப்பிளின் தோலானது அவ்வளவு கடினமாக இருக்காது, இருப்பினும் அவ்வாறே உண்பர்.
அத்தகைய ஆப்பிளின் தோலை சாப்பிடுவதால் விரைவில் செரிமானமடைவதுடன், பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆப்பிளின் தோலில் கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
மேலும் அது டயட் மேற்கொள்வோருக்கு ஏற்ற அதிகமான நார்ச்சத்தானது உள்ளது. அதிலும் அளவுக்கு அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், உடலில் இருக்கும் செல்கள் வலுவடைவதுடன், இதய நோய் மற்றும் நீரிழிவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது தோலுடன் சாப்பிடும் பழங்களில் மிகவும் எளிதாக விழுங்கக்கூடிய பழம்.
எலுமிச்சை: எலுமிச்சையின் தோலை சாப்பிட்டால், உடலில் செரிமானமானது நன்கு நடைபெறும். இது வயிற்றில் ஏற்படும் தசைப்பிடிப்புகளை நீக்கும்.
ஒரு சிறு துண்டு எலுமிச்சை தோலை தினமும் சாப்பிட்டால், உடலில் இரத்த சுழற்சியானது நன்கு நடைபெறும்.
மேலும் ஆயுர்வேதத்தில் கல்லீரலில் ஏற்படும் நோய்க்கு, இந்த எலுமிச்சையின் தோலில் இருந்து சாற்றை எடுத்தே கொடுப்பர். அதிலும் ஆயுவேதத்தில் ஸ்கர்வி நோயை சரிசெய்ய, இந்த சாற்றையே கொடுப்பார்கள். தினமும் ஒரு சிறு துண்டுகளை சாப்பிட்டால் சருமமும் அழகாக இருக்கும்.
ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தோலில் அதிக அளவு தாவர ஊட்டச்சத்துகள் மற்றும் ஃப்ளேவனாய்டுகள் உள்ளன. இதுவும் செரிமானத்திற்கு சிறந்தது.
மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கும். அதிலும் இதனை சமையலில் பயன்படுத்தினால், ஒரு நல்ல சுவையானது கிடைக்கும். இந்த ஆரஞ்சு பழத்தோலை அப்படியே சாப்பிட முடியாதவர்கள், அதனை சமையலில் சேர்த்து உண்ணலாம்.
கிவி: கிவி பழத்தின் தோலில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவுக்கும் அதிகமாக இருக்கிறது.
அதிலும் இதனை உண்பதால் இரத்தமானது லேசாக இருப்பதோடு, உடலில் எளிதாக நன்கு சுழற்சியானது நடைபெற்று, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.
ஆகவே இந்த பழத்தை தினமும் உண்டால், உடலுக்கு தேவையான சத்துக்களை எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment